29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு தடுப்பூசி!

🔥 Views : 9
👁 Reading Now : 47
File Picture

நாட்டில் உள்ள உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்று இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சுரேஷ் கேட்டுக் கொண்டார்.
உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் நோய்த்தொற்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் இவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
தினமும் மக்களுக்கு தேவையான உணவு வகைகளை இவர்கள் சமைக்கிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போடும் திட்டத்தை உணவக தொழிலாளர்கள் மத்தியில் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles