29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

‘உணர்ந்தேன் நான்’ அம்மா பாடல் வெளியீடு

🔥 Views : 8
👁 Reading Now : 69

மலேசியாவில் தவில்நாதஸ்வரகலைத் துறையில் ஒரு தவில் வாசிப்பாளராக வலம் வருபவர் ஜனனேஸ்வரி. ஏழுஆண்டுகளுக்கு மேல் பெண் தவில் வாசிப்பாளராக திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பல இடங்களில் தவில் வாசித்து வருகிறார். தற்போதுஒரு புதியமுயற்சியாக பாடல் துறைக்கும்தன் ஆர்வத்தை திருப்பியுள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கு சமர்ப்பணமாக
அம்மா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘உணர்ந்தேன் நான்’ தலைப்பில் இந்தப் பாடல் அவரின் Youtube சேனல் J Music Productions அகப்பக்கத்தில்வெளியீடு கண்டுள்ளது.. இந்தப் பாடலை இவரே எழுதிதயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை மென்மையான குரலுக்குச் சொந்த்க்காரர் புவனேஸ்வரிபாடியுள்ளார். அதோடு, நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானகபில் ராஜ் இசையமைத்துள்ளார். இவர்களின் பாடல் வெற்றி பெறவாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles