31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

வரும் வெள்ளிக்கிழமை முதல் கிள்ளான் மருத்துவமனையில் தற்காலிக சிகிச்சை மையங்கள் இயங்கும்

🔥 Views : 7
👁 Reading Now : 27

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மையங்கள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை மாலையில் செயல்பட தொடங்கும் என்று கிள்ளான் பெரிய மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஸூல்கர்யணன் தெரிவித்தார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மலேசிய ஆயுதப்படை யால் நிர்மாணிக்கப்படும் இந்த தற்காலிக மருத்துவமனைகள் வரும் வெள்ளிக்கிழமை மாலையில் செயல்பட தொடங்கும் என்று டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி தெரிவித்தார்.
மொத்தம் 14.24 மீட்டர் நீளமும் 30.48 மீட்டர் அகலம் கொண்ட இந்த தற்காலிக மருத்துவமனை கார் நிறுத்தும் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை அறை, கழிப்பறை, குளியலறை, தாதியர் முகப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் இருப்பதாக என்று அவர் சொன்னார்.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் தற்போது ஆயிரம் கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 100 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதியை தற்காலிக மருத்துவமனை கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles