32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

3 கோடி வெள்ளி வெகுமதி மற்றும் அமைச்சர் பதவி 3 ஜசெக எம்பிக்களிடம் MACCவாக்குமூலம் பதிவு

🔥 Views : 6
👁 Reading Now : 61

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தால் 3 கோடி வெள்ளி வெகுமதியும் அமைச்சர் பதவியும் காத்துக் கொண்டிருப்பதாக 3 ஜசெக எம்பிக்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் மற்றும் பண்டார் கூங்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் யீ ஆகியோருக்கு குறுந்தகவல் மூலம் அணி மாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீங்கள் அணி மாறி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 3கோடி வெள்ளியும் அமைச்சர் பதவியும் காத்துக் கொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இது தொடர்பில் இவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இதனிடையே இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு ஆணையம் மிகக் கடுமையாக கருதுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.மூன்று எம்பிக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்பிக்களுக்கு கைத்தொலைபேசி மூலம் தகவல் அனுப்பி வைத்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை..
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பதால் பொதுமக்கள் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாமென மலேசியா லஞ்ச ஒழிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles