
செராஸ் தமிழ்ப் பள்ளியில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்று பொருள் உதவிகள் வழங்கப்பட்டன.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் ஏற்பாட்டில் இன்று 63 வசதி குறைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
செராஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பிபிஆர் குடியிருப்பு மற்றும் பல இடங்களில் 12,000க்கும் மேற்பட்ட வசதி குறைந்த மக்கள் வாழ்கிறார்கள்.
இதில் பாதிப்பேருக்கு நாங்கள் உணவு கூடைகளை வழங்கியிருக்கிறோம்.
வரும் சனிக்கிழமை செராஸ் ஸ்ரீ சிலாங்கூர் குடியிருப்பு பகுதியில் 1,500 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று செராஸ் தமிழ்ப் பள்ளியில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ சபா கெஅடிலான் கட்சி தலைவர் எஸ்.டி. பாலா, சமூக சேவையாளர் செல்வராஜூ மற்றும் செராஸ் சமூகநல இயக்கத்தின் தலைவர் ஷாண் முத்துசாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
