27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

நாட்டில் புதிய வகை தொற்று நோயான டெல்டா வைரஸ் பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் கொண்டிருக்கிறார்கள். வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது நாட்டின் நோய்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் ஏற்படுத்திவரும் பாதிப்புகளால் பெற்றோர்கள் பெரும் அச்சம் அடைந்திருக்கிறார்கள். நாட்டில் நோய் தொற்றால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles