27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்!பிரதமருக்கு மாமன்னர் ஆலோசனை

தமக்கு போதுமான எம்பிக்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை நிரூபிக்க முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கூட்டும் படி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆலோசனை வழங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மாட்சிமை தங்கிய மாமன்னரை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சந்தித்திருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது விரைந்து நாடாளுமன்றத்தை கூட்டும்படி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை மாமன்னர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ சார்பில் 15 எம்பிக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சி வரிசையில் 105 எம்பிக்கள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை நிராகரிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
தற்போது பிரதமருக்கு 100 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சி வரிசையில் அம்னோ உட்பட 120 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles