31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

🔥 Views : 10
👁 Reading Now : 38

கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மானுடன் தொடர்புடைய இரு ஆடவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் ஒருவர் போலீஸில் புகார் செய்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அப்பெண் முடிவு செய்துள்ளார்.
இன்னும் ஏழு நாட்களில் பதில் கிடைக்கவில்லை என்றால் பொலீஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் முடிவு செய்திருப்பதாக அவரின் வழக்கறிஞர் அஸிக் அலி தெரிவித்தார்.
பாலியல் வன்முறை செய்யப்பட்டது தொடர்பில் ஒன்பது மாதத்திற்கு முன்னர் இப்பெண் போலீசில் புகார் செய்தார்.
ஆனால் இதுவரை போலீசாரிடம் இருந்து எந்த ஊரு பதிலும் வரவில்லை என்பதால் அவர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்றார் அவர்.
இதனிடையே பேரா கெஅடிலான் தலைவர் பார்ஹாச் சல்வடோர் கூறுகையில் போலீசார் இந்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles