29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கம்போங் பாகான் செராய் இந்து மயானத்தை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பராமரிக்கும்

பினாங்கு பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் பரிபாலன தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கம்போங் பாகான் செராய் படுமா தோட்ட இந்து மயானத்தை பினாங்கு இந்து
அறப்பணி வாரியம் பராமரிக்கும்.
அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்,அந்த இடுகாட்டிற்கு புதுப்பொழிவை
ஏற்படுத்தும் வகையில் அதற்கான சீரமைப்புப் பணிகளும் தொடங்கியுள்ளது.
பெர்மாத்தாங் பாவ் அருகில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பக்கத்தில்
அமைந்துள்ள இந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த இந்து மயானத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை
வசதிகளை ஏற்படுத்துவதற்கான தருணம் வந்து விட்டதாக,நேற்று
இப்பகுதியை நேரில் வந்து பார்வையிட்ட பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, பினாங்கு இந்து அறப்பணி
வாரியத்தின் ஆணையர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி,செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர்கள் டேவிட் மார்ஷெல்,ஜேசன் ராஜ் ஆகியோர்
தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக பிறை ஸ்ரீ செல்வ விநாயகர்
பரிபாலன தேவஸ்தானத்தில் நிகழ்ந்து வந்தப் பிரச்சனைகளின் நீதிமன்ற தீர்ப்பு இந்து அறப்பணி வாரியத்திற்கு சாதகமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles