28.5 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

பிரதமருக்கு எதிராக செப்டம்பர் 7 இல் நம்பிக்கையில்லா தீர்மானம்!

வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தகவல் பல்லூடக அமைச்சர் சைபுதீன் அப்துல்லா இன்று அறிவித்தார்.
செப்டம்பர் 6ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை மாமன்னர் தொடக்கிவைத்தார் அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7இல் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்படும். இது தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பை வெளியிடுவார் என்று சைபுடின் அறிவித்தார்
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று 15 அம்னோ எம்பிக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் 105 எம்பிக்கள் பிரதமரை நிராகரிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
ஆகமொத்தம் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் 120 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர் பிரதமருக்கு வெறும் 100 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதால் விரைந்து நாடாளுமன்றத்தை கூட்டும் படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles