25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

அம்னோ எடுக்கும் எந்த முடிவும் செல்லாது! மஇகா அதிரடி அறிவிப்பு!

அம்னோ தலைமைத்துவம் மற்றும் உச்சமன்ற பதவிகள் அனைத்தும் ஜூன் மாதம் 30ஆம் தேதியோடு காலாவதியாகி விட்டதால் அம்னோ எடுக்கும் எந்த முடிவுகளும் செல்லாது என்று ROS எனப்படும் சங்கங்கள் பதிவிலாகா அறிவித்து விட்டது.
ஆகையால்
தேசிய முன்னனி தலைமைத்துவ பொறுப்பை உறுப்புக் கட்சிகளிடம் அம்னோ ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்னோவின் 2018/2021க்கான தலைமைத்துவம் மற்றும் உச்சமன்ற பதவிகளுக்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு காலாவதியாகி விட்டதாக ROS அறிவித்துள்ளது. இதனால் அம்னோ தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகள் எதுவும் செல்லாது.
தேசிய முன்னனி தலைமைத்துவத்தில் பதவி வகிக்கும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி எடுக்கும் முடிவுகள் எதுவும் செல்லாது என்பதால் தேசிய முன்னனி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles