
நோய்த்தொற்றால் மரணமடையும் குடும்பங்களுக்கு உதவ 1,000 வெள்ளியை மரண சகாய நிதி வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
மரண சகாய நிதியின் மூலம் மேலும் ஆயிரம் பேர் வரை பயன்பெறும் வகையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 31 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த திட்டத்திற்கு இதுவரை 1,500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மரண எண்ணிக்கையும் அதன் காரணமாக நிதிக்கான விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு நிதி ஒதுகீட்டை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களுக்கு ஆயிரம் வெள்ளி மரண சகாய நிதி வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதற்கு நேற்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்..



