25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் எம்பிக்கள் எண்ணிக்கை எவ்வளவு?

🔥 Views : 11
👁 Reading Now : 63

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் எம்பிக்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதால் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமருக்கு எத்தனை எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சபாநாயகருக்கு இஸ்தான நெகாரா கடிதம் அனுப்பியுள்ளதும் பெரும் அதிர்ச்சியாகும்.
இஸ்தானா நெகாரா அதிகாரி அமாட் பாடில் சம்சூடின் ஆகஸ்ட் 9ஆம் தேதி சபாநாயகருக்கு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பிரதமரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள மாமன்னர் விரும்புகிறார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மூன்றாம் தேதி சபாநாயகர் டத்தோ அஸாஹர் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பிய கடிதத்தில் தற்போது பிரதமருக்கு 106 எம்பிக்கள் ஆதரவை பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆனால் ஆகஸ்ட் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
மேலும் 14 அம்னோ எம்பிக்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே பிரதமருக்கு உண்மையிலேயே எத்தனை எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள மாமன்னர் விரும்புகிறுர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles