
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் எம்பிக்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை
தெரிந்துகொள்ள சபாநாயகர் டத்தோ அஸாஹருக்கு இஸ்தான நெகாரா ஆகஸ்ட் 9ஆம் தேதி கடிதம் அனுப்பி இருக்கிறது.
அந்தக் கடிதம் எனக்கும் துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ முகமட் ரஸிட்டுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆகவே இஸ்தானா நெகாரா அனுப்பிய அந்த கடிதத்தை படித்தீர்களா அல்லது இல்லையா என்று துணை சபாநாயகரிடம் மற்றொரு துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ அஸாலினா கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இஸ்தானா நெகாரா அதிகாரி அமாட் பாடில் சம்சூடின் ஆகஸ்ட் 9ஆம் தேதி சபாநாயகருக்கு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள மாமன்னர் விரும்புகிறார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



