
நோய்த்தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் அடுக்கி வைக்க கொள்கலன் தயாராக இருக்கிறது ஆகவே இப்போது உங்கள் பெயர்களை கொடுங்கள் என்று கிண்டலாகப் பேசிய கெடா மந்திரி பெசார் சனுசியை போலீஸார் விசாரணை செய்யுமா என்று புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் இன்று கேள்வியை எழுப்பினார்.
நோய்த்தொற்றால் இறப்பவர்கள் பற்றி கிண்டலடித்த கெடா மந்திரி பெசாரை திட்டியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதேசமயம் கெடா மந்திரி பெசாரை போலீஸார் விசாரணை செய்யுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வேண்டுமென்றே பொது அமைதியை மீறும் வகையில் கெடா மந்திரி பெசார் சனுசி பேசியிருக்கிறார்.
அந்த அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்று ராம் கர்ப்பால் சிங் சுட்டிக்காட்டினார்.



