25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

மூன்று வீரர்கள் சுட்டுத்தள்ளி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் வான் படை வீரர்!

🔥 Views : 10
👁 Reading Now : 67

சரவா கோத்தா சமராஹான் அரச மலேசியா வான்படைத் தளத்தில் 3 பேரை சுட்டுக் கொன்ற வான் படை வீரர் ஒருவர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொன்றார்.
அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் இன்று காலை 7 50 மணிக்கு நடைபெற்றதாக சரவா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அய்டி இஸ்மாயில் தெரிவித்தார்.
வான் படை வீரர் ஒருவர் தனது மூன்று சகா வீரர்களை நோக்கி சுட்டார் பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டார்.
சுடப்பட்டவர்களில் இருவர் அதே இடத்தில் உயிர் இழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். இவர் ராணுவ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற போது உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவத்தில் மொத்தம் 4 படை வீரர்கள் மரணம் அடைந்து இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles