25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் அமைய மொகிதீன் எதிர்ப்பாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும்!

🔥 Views : 5
👁 Reading Now : 54

கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் மலர டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை எதிர்ப்பவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றால் நாடு பெரும் பிரச்சினை எதிர்நோக்கி இருக்கிறது.
மேலும் பொருளாதாரமும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலரும் புதிய அரசாங்கத்தினால் மட்டுமே இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் இருக்கிறது.
ஆகவே டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை எதிர்ப்பவர்கள் புதிய அரசாங்கம் மலர ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டார்கள்.
மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 105 எம்பிக்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை நிராகரிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது அம்னோ உட்பட எதிர்க்கட்சி வரிசையில் 120 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வெறும் நூறு எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதால் அவர் பெரும்பான்மையை இழந்து இருக்கிறார்.
கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் 43 உட்பிரிவு 4ஆவது விதியின் கீழ் பிரதமர் கௌரவமான முறையில் பதவி விலக மறுத்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles