25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துங்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 62

நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் படி முன்னாள் சுகாதார அமைச்சரும் கோலாசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி கேட்டுக்கொண்டார்.
வயது குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உயிரிழப்பதை நாம் பார்க்கிறோம்.
ஆகவே இதனை தடுத்து நிறுத்த அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்பட வேண்டும்.
டெல்டா வைரஸ் தாக்குதலால் வேகமாக இருக்கும் என்பதால் உடனடியாக இளைஞர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது நோய் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக அவர் சொன்னார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நாட்டில் நோய் தொற்றால் 70 கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைந்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles