
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் திட்டத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பிரச்சினை இல்லாதவர்களுக்கு வயது வாரியாக தடுப்பூசி செலுத்தும் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு செயல்குழுவிடம் வழங்கிய பரிந்துரையின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.
இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நோர் ஹிஷாம் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளை அப்பணிக்குழு அடுத்த வாரம் வெளியிடும் என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
உடல் நலப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இளையோர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்னர் மருத்துவ நிபுணர்களால் சோதிக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
