29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

சொந்த செலவில் வசதி குறைந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் டாக்டர் சந்திரன்

🔥 Views : 41
👁 Reading Now : 63

நோய் தொற்றால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பலர் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள், சமூக இயக்கங்கள் உட்பட நல்லுள்ளம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு இன்னமும் உதவி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சுங்கை பூலோ வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் டாக்டர் சந்திரன் தனது சொந்த செலவில் இதுவரை 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை நாடி வரும் வசதி குறைந்த மக்களுக்கும் நேரடியாகச் சென்று உணவு கூடைகளை வழங்கி அவர்களின் சுமையை போக்கி கொண்டிருக்கிறார்.
மக்கள் தற்போது உணவுக்காக ஏங்கி கோண்டிருக்கிறார்கள்.
வருமானம் இல்லாததால் பல குடும்பங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன.
இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் என்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கி கொண்டிருப்பதாக டாக்டர் சந்திரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles