25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

இப்போதுதான் எதிர்க்கட்சிகளை தேடுவதா? சைட் சாடிக் கேள்வி

🔥 Views : 7
👁 Reading Now : 40

பெரும்பான்மையை இழந்துவிட்ட பின்னர்தான் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எதிர்க்கட்சிகளை தேடுகிறார் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஒரே மேசையில் அமர்ந்து பேசுவோம் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எதிர்க்கட்சிகளை நாடியுள்ளார்.
அதிகாரம் பறிபோன பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறிப்பாக எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் சரிசம ஒதுக்கீட்டை வழங்க பிரதமர் முன்வந்திருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.
எங்களுக்கும் சரிசம ஒதுக்கீடு வழங்குங்கள் என்று நாங்கள் கோரிக்கை விடுத்ததை பிரதமர் மறந்து விட்டாரா என்று சைட் சாடிக் கேள்வி எழுப்பினார்.
பெரும்பான்மையை இழந்து விட்ட பின்னர் பிரதமர் பதவியில் நீடிக்க இப்போது பலவிதமான சலுகைகளை வழங்க டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முன்வந்திருக்கிறார்.
அவர் கௌரவமான முறையில் பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என சைட் சாடிக் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles