25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

மொகிதீன் யாசின் சலுகைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தனர்!

🔥 Views : 11
👁 Reading Now : 52

பிரதமர் மீதான நம்பிக்கை தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பல சலுகைகளை வழங்க பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முன்வந்திருக்கிறார்.
அரசியல் வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரிசம ஒதுக்கீடு வழங்க பிரதமர் முன்வந்திருக்கிறார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மூத்த அமைச்சருக்கு ஈடான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்ள டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வழங்க முன் வந்திருக்கும் சலுகைகளை புறக்கணிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles