28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நோய்த்தொற்றால் மரணமடையும் இஸ்லாம் அல்லாதோருக்கு சிலாங்கூர் அரசின் சிறப்பு சவஅடக்க நிதி

நோய் தொற்றால் மரணமடையும் முஸ்லிம் அல்லாதவர்களின் சவ அடக்கத்துக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 5 லட்சம் நிதியை ஒதுக்கி இருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஸ்ரீ கணபதி ராவ் என்று அறிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் கோவிட் மரண சகாய நிதி மூலம் ஏற்கனவே ஆயிரம் வழங்கப்படுகிறது.
இப்போது சிறப்பு நிதியாக மேலும் 1,000 வெள்ளி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்
இன்று தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அவர் கேட்டுக்கொண்டார்

1) நோய் தொற்றால் இழந்தவர் மலேசிய பிரஜையாக இருக்க வேண்டும்.
2) மரணம் அடைந்தோர் சிலாங்கூரில் பிறந்தவர் அல்லது குறைந்தது 10 ஆண்டுகளாவது சிலாங்கூர் மாநிலத்தில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.

3).கோவிட்-19 காரணமாக மரணம் அடைந்ததுக்கான உறுதி செய்யப்பட்ட மருத்துவமனை / அரசு சுகாதார சிகிச்சையகம் அல்லது இறப்பு சான்றிதல் கொண்டிருக்க வேண்டும்.
4) இறந்தவர் இஸ்லாம் அலாதாராக / சிலாங்கூர் மாநிலத்தில் தகனம் செய்யப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
5)ஒரு இறப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
6) இறந்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்க்குள் நெருங்கிய வாரிசுதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பு-

விண்ணப்பங்களை
நேரடியாக வருகை தந்து
YB EXCO- YB Tuan Ganabatirau
A/L Veraman :
Pejabat Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri Selangor,
Tingkat 5,Bangunan SSAAS,
40503 Shah Alam,Selangor
No.Tel :03-55447307

அல்லது;
முறையான ஆவனங்களுடன் மின்னஞ்சல் வழியாக Pejabat YB EXCO
E-mel : staffexco2014@gmail.com மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விண்ணப்பம் செய்யும் நாள் மற்றும் உதவி நிதி வழங்கும் முறை.

1.ஆகஸ்ட் 18,2021 முதல் நவம்பர் 30,2021 வரை அல்லது ஒதுக்கப்பட்ட நிதி முடியும் வரை.

  1. அதிகப்படியாக 1,000 வெள்ளி
    வங்கி கணக்கில் 14 நாட்களுக்குள் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles