28.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

கோலமூடா மற்றும் யான் மாவட்டங்கள் பேரிடர் பகுதிகளாக பிரகடனம்

🔥 Views : 36
👁 Reading Now : 38

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பையும்,உயிர் பலியையும் ஏற்படுத்தியிருக்கும் யான் மற்றும் கோலமூடா ஆகியவை முதல்கட்டப் பேரிடர் பகுதியாக கெடா மாநில அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவின்படி இது பிரகடனப்படுத்தப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோர் கூறினார்
.இதன் தொடர்பில் அணைத்து அரசாங்கம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பேரிடர் நடவடிக்கை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி உதவ விரும்பும் தனியார் மற்றும் தன்னார்வலர்களுக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் கீழ் போதுமான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட கடுமையான மழை,வெள்ளம்,மண்சரிவு ஆகியவற்றால் இவ்விரு மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles