
தேசிய மீட்சி திட்டம் மற்றும் நோய்த் தொற்றை கலைய அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழுவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றை கலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் 21 மாதங்கள் உள்ளன.
இந்தக் குறுகிய காலகட்டத்தில் இரு அரசாங்கம் இரு பிரதமர்கள் மாறியுள்ளனர் என்றார் அவர்.
நிலைத்தலைமையற்ற அரசியலால் நாடும் மக்களும் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகவே நாம் ஒரு குடும்பமாக இருந்து செயலாற்றுவோம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளார்
எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மற்றும் கெஅடிலான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தொடர்பில் பிரதமர் முழுமையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.



