31.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் 150 இந்திய பிரஜைகள் பத்திரமாக தாயகம் திரும்பினர்

🔥 Views : 8
👁 Reading Now : 24

கேபிஎஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ்எம்ஆர் மனோ டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலமாக நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 150 இந்திய பிரஜைகள் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
மலேசியாவில் சிக்கிக்கொண்ட இந்திய பிரஜைகள் பத்திரமாக நாடு திரும்பும் வகையில் கேபிஎஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி ஏற்பாடு செய்த பன்னிரண்டாவது சிறப்பு விமானம் இதுவாகும்.
நாட்டில் கூடுதலாக தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 500 வெள்ளி அபராதம் செலுத்தி நோய்தொற்று சான்றிதழை காட்டி பத்திரமாக தாயகம் திரும்பி இருப்பதாக கேபி சாமி தெரிவித்தார்.


நேற்று மாலை 6 மணிக்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியில் பத்திரமாக தரை இறங்கியது.
பின்னர் திருச்சி இருந்து புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் மலேசிய பிரஜைகளும் தாயகம் திரும்பியதாக அவர் சொன்னார்.
தங்களை எவ்வித பிரச்சினையுமின்றி தாயகம் திரும்புவதற்கு பெரும் உதவிகளை புரிந்த கேபி எஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ் எம் ஆர் மனோ டிராவல்ஸ் நிறுவனத்திற்கு இந்தியப் பிரஜைகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles