33 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

சிலாங்கூர் மாநில தமிழர் ஒற்றுமை படையின் சமூக சேவை

சிலாங்கூர் மாநில தமிழர் ஒற்றுமை படை மற்றும் கோவை நிறுவனம் இணைந்து டாமான்சாரா குடியிருப்பு பகுதிகளில் இலவசமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டது.
நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் சிலாங்கூர் மாநில தமிழர் ஒற்றுமை படை களத்தில் இறங்கி பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளித்து வருகிறது.
நேற்று முன்தினம் 35 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு இலவசமாக கிருமி நாசினி யை தெளித்தது இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழர் ஒற்றுமை படை மற்றும் கோவை நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது சிலாங்கூர் மாநில புக்கிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் சிறப்பு வருகை புரிந்த இந்த கிருமி நாசினி தெளிப்பு பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இலவசமாக குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமி நாசினி யை தெளிக்கும் சிலாங்கூர் ஒற்றுமை படை சேவைகளை அவர் வெகுவாக பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles