26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

சிலாங்கூர் ஜசெக தேர்தல்
பிரச்சாரம் சூடு பிடிக்கிறது!

🔥 Views : 39
👁 Reading Now : 65

சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தல் வரும் ஜூன் 6ஆம் தேதி ஷா ஆலாம் கொன்சேன்சன் சென்டரில் நடைபெறுகிறது இம்முறை 15 உச்சம்பெற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் மொத்தம் 50 க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகிறார்கள். சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் உச்ச மன்றத்திற்கு போட்டியிடுகிறார்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் மற்றும் புக்கிங் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ஆகியோரும் இந்த பதவிக்கு போட்டியிடும் முன்னணி வேட்பாளர் ஆவார்.
சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வாக்களிக்கிறார்கள்.
15 உச்சமன்ற பதவிகளுக்கு போட்டியிடும் 50 பேரில் கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ், ராஜிவ் ஆகியோர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது மக்களுக்கு சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு பேராளர்கள் மகத்தான ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles