
மத்திய செபராங் பிறை புக்கிட் மெர்தாஜாம் அல்மாரப்பர்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 80 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீஜடா முனி ஆலயத்தை இருக்கும் இடத்திலிருந்து அகற்ற வேண்டுமென நில உரிமையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இடத்தை காலிசெய்ய அவர் ஆறு மாத காலம் கெடு வழங்கியிருக்கும் நிலையில்,பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல முடியாதவகையில் வேலியை அமைத்திருப்பதோடு, இடையில் கால்வாயையும் தோன்றி, மக்களின் போக்குவரத்துக்கு தடங்களை ஏற்படுத்தியிருக்கும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின்செயலை வன்மையாக கண்டிப்பதாக பினாங்குஇந்துஅறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் கூறினார்.

பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் ,அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக பக்தர்களை ஆலயத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தும் செயல் நியாயமற்றது என்றார்.
இந்த ஆலயத்திற்கு ஒரு மாற்று இடத்தை நில உரிமையாளர் வழங்கியிருந்தாலும்,அது ஆலயத்தை அமைப்பதற்குதகுந்த இடமாக இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டது. நில உரிமையாளரின் இந்நடவடிக்கை இந்நாட்டுமக்களின் சமய உணர்வை அவமதிப்பதற்கு சமமாகும் என பினாங்கு மாநில இந்து சங்கத்தலைவர் எம். முனியாண்டி தெரிவித்தார்.
