32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பேராசிரியர் டாக்டர் ராமசாமி ஒரு சமூகப் போராளி

🔥 Views : 8
👁 Reading Now : 32

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி இன்று தனது 72வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். சிறு வயது முதல் இதுநாள் வரை இந்திய சமூகத்தின் நன்மைக்காக போராடி கொண்டிருக்கும் ஒரு உன்னத போராளியாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். பழனிச்சாமி பழனியம்மா தம்பதியரின் புதல்வரான இவர் கடந்த 1949 ஆம் ஆண்டு மே 10 தேதி பேராக் சித்தியவானில் பிறந்தார்.
ஒரு தோட்டப பாட்டாளி மகனான இவர் படிப்படியாக கல்விகற்று அமெரிக்கா இந்தியானா பல்கலை கழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதுகலை பட்டத்தை பெற்றார். பின்னர் கனடா பல்கலைக்கழகத்திலும்அவர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்

இறுதியாக 1991ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பொது நிர்வாகத் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
மலேசியாவில் தோட்டப் பாட்டாளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து போராடினார்.
அதன் பின்னர் சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அனைத்துலக அரங்கில் வஞ்சிக்கப்படும் மக்களுக்காகவும் தொடர்ந்து துணிந்து குரல் கொடுத்தார். இவ்வேளையில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை அமைதி பாதைக்குக் கொண்டு வர அனைத்துலக சமூகம் பாடுபட்டது இதில் ஒரு சமாதான தூதுவராக டாக்டர் ராமசாமியும் ஈடுபட்டார்.
இந்தோனேசியா ஆட்சே மாநிலத்தில் ஆட்சி மலர அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு தலைவராக இவர் விளங்கினார் இதுமட்டுமின்றி பல நாடுகளில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று தனது பங்களிப்பை நிறைவாக செய்தவர் டாக்டர் ராமசாமி ஆவார் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து துணிந்து குரல் கொடுத்தவர் இவராவார்.


மலேசியாவில் தமிழர்கள் மற்றும் அனைத்து இன் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் டாக்டர் ராமசாமி தலைமையில் என்று பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மூலம் அற்புத காரியங்களை செய்து வருகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு தங்கரத ஊர்வலத்தின்போது கிடைக்கும் அனைத்து நன்கொடைகளையும் இந்திய மாணவர்கள் கல்வி நிதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். பினாங்கில் இன்று தமிழ்ப்பள்ளிகள் பாலர் பள்ளிகளும் சிறந்து விளங்குகின்றன.
தனது வாழ்நாள் முழுவதும் இந்திய சமூகத்துக்காக அர்ப்பணித்து சிறந்த சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் பேராசிரியர் டாக்டர் ராமசாமி மேலும் தனது சேவைகளை வழங்கிட ஆசியா தமிழ் செய்தி மனதார வாழ்த்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles