27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

வசதிக் குறைந்த 150 குடும்பங்களுக்கு மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியம் பேருதவி

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு தென் செபராங் பிறை மாவட்ட மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
நிபோங் திபால் சுங்கை ஜாவி போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,150 உணவுக் கூடைகளை அறவாரியத்தின் தலைவர் பரமகுரு பாலன்,மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ
சோங் செர்ன்னிடம் ஒப்படைத்தார்.
மாவட்ட போலீஸ் தலைவரின் தலைமையில் இந்த வட்டாரத்தில் சிரமப்படும் குடும்பங்களுக்கு இந்த உணவுக் கூடைகள் பகிர்ந்தளிக்கப்படும் என பரமகுரு பாலன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏஎஸ்பி ந.கோவிந்தசாமி,
போலீஸ் அதிகாரிகள்,குற்றத்தடுப்பு அறவாரியத்தின் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles