30.1 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

வீட்டை சீரமைக்க உதவுங்கள்; இந்திய சகோதரர்கள் உருக்கமான வேண்டுகோள்

🔥 Views : 13
👁 Reading Now : 42

மிகவும் பழுதான நிலையில் இருக்கும் எங்களின் வீட்டை பழுது பார்த்து உதவுமாறு வயது முதிர்ந்த இரு சகோதரர்கள் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கு போக்கோக் அசாம்,கம்போங் உலு துப்பாயில் வசித்து வரும் கருப்பையா த/பெ பம்பையன் ( வயது 70 ) மற்றும் ஆறுமுகம் த/பெ பம்பையன் ( வயது 60 ) ஆகிய இருவரும் உதவி கோரியுள்ளனர்.
இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் இவர்களின் பலகை வீடு,கரையான்களால் அரிக்கப்பட்டு,தகர கூரைகளும் பழுதாகி மோசமான நிலையில் உள்ளது.
மழை பெய்தால் வீட்டுக்குள் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ப.ஆறுமுகம் கூறினார்.
அரசியல்வாதிகளிடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்றார்.
எனக்கும் நிரந்தர வேலையில்லை.சகோதரர் ஒரு மாற்று திறனாளி. இந்நிலையில் இவர்களின் சிரமத்தை அறிந்து உதவுவதற்கு முயற்சியை மேற்கொண்டிருக்கும் தைப்பிங் வட்டார சமூக சேவையாளர் வரதன் நாச்சிமுத்துவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்ட நல்லுள்ளங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.( தொடர்புக்கு: 011 – 36253169 )

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles