28.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

தேசிய முன்னணிக்கு இந்திய வாக்குகள் வேண்டாம் என லோக்மான் அறிவிக்க முடியுமா?

நாட்டில் எந்த ஒரு தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மை இல்லை எனவே இந்திய தலைவர்கள் கூறிப்பாக மஇகா தலைவர்கள அலட்டி கொள்ள வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு கானொலி வழியாக அம்னோவைச் சேர்ந்த டத்தோ லோக்மான் அடாம் பேசி இருப்பது கண்டனத்திக்குறியது என ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சந்திர சேகரன் சாடியுள்ளார்.
டத்தோ லோக்மான் அவருடைய அந்த பதிவில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை தொட்டு பேசி இருப்பது ஏற்க முடியாது எனவும், அது தான் உண்மை எனவும் கூறியிருக்கும் லோக்மான் ஒரு அரசியல் குருடன் என சந்திர சேகரன் ஆறுமுகம் வர்ணித்துள்ளார்.
வரும் 15ஆவது பொதுததேர்தலில் இந்தியர்கள் சிறுபான்மையாக இருப்பதால் அவர்களின் வாக்குகள் அம்னோவுக்கு வேண்டாம் என அறிவிக்க முடியுமா என டத்தோ லோக்மானுக்கு சந்திரசேகரன் ஆறுமுகம் கேள்வி விடுத்துள்ளர்.
கடந்த 14ஆவது தேர்தலில் அடைந்த பின்னடைவை சற்று நினைவு கொள்ள வேண்டும் என
அம்னோவின் மத்திய செயலவை உறுப்பினருமான லோக்மானுக்கு நினைவு படுத்துவதாக அவர் இங்கே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நாட்டில் இந்திய வாக்காளர்கள் வெறும் 7.8 சதவிதம், அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், 62 நாடாளுமன்ற தொகுதிகளிளும்,110 சட்டமன்ற தொகுதிகளிளும் தேசிய முன்னணியாக இருத்தாலும் சரி அல்லது நம்பிக்கை கூட்டணியாக இருத்தாலும் அதன் வெற்றியை உறுதி செய்வது இந்த சிறுபான்மை இந்திய வாக்காளர்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். முதலில் உண்மைகளை அறிந்து பேச வேண்டும் என ஜொகூர் ஜசெக தலைவர்களின் ஒருவரான சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles