
மலேசியாவில் தமிழ் கல்வி 205 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறுவர் பாடல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
7 – 9 வயது வரையிலான படிநிலை 1 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
சிறுவர் பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட வேண்டும்.
சிறுவர் பாடல் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும்’.
பாடலைப் பாடி காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
காணொலியில் எந்தவித [EDIT/ GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
போட்டியாளர் தனது பெயர், வயது, பள்ளிப் பெயர், பாடலின் தலைப்பு ஆகியவற்றைக் கூறிய பின் பாடத் தொடங்க வேண்டும்.
நேரம் 2 நிமிடம் மட்டுமே.
போட்டியாளர் பள்ளிச் சீருடை அல்லது பாடலின் கருப்பொருளுக்கு ஏற்ற உடை அணியலாம்.
பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_siruvarpaadal_ எனத் தலைப்பிட்டுப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்
காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
முதல் பரிசு RM150. 2ஆம் பரிசு RM120. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசு தலா RM50.
போட்டிக்கான இறுதி நாள் :- 12.09.2021
நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
தொடக்கப் பள்ளி படிநிலை 1 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
