
தோக்கியோ பரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
நேற்று மாலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று பேர் பங்கேற்றனர்.
இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
அமெரிக்க வீரர் கிரிஸ் தங்கப்பதக்கம் வென்றார்.
இதற்கு முன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியர்கள் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரியப்பன் ஏற்கெனவே பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரியப்பன் சாதனையால் இந்திய தேசம் பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
