27.5 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பானின் ஆதரவாளர் டேவிட் பாலா காலாமானர்!

🔥 Views : 22
👁 Reading Now : 39

மக்கள் தொண்டன் டாக்டர் டேவிட்டின் முன்னாள் செயலாளர் மற்றும் பக்கத்தான் ஹரப்பானின் மிகப்பெரிய ஆதரவாளராக விளங்கிய டேவிட் பாலா நேற்று இரவு காலமானார்.
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி, கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமானா தலைவர் முகமட் சாபு, அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா உட்பட பல அரசியல் தலைவர்கள் நெருங்கிய நட்பு கொண்டிருந்த இவளின் மரணம் பெரும் அதிர்ச்சியாகும்.
தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சிக்கு உழைத்த ஒரு மாபெரும் தொண்டராக இவர் விளங்குகிறார்.
இவரின் மறைவு செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி மற்றும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் தெரிவித்தனர்.
மக்கள் தொண்டன் டாக்டர் டேவிட் மூலம் அறிமுகமான இவர் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களிடம் நெருங்கிய நட்பை கொண்டிருந்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது அதிக பற்று பாசம் கொண்டிருந்த இவரின் திடீர் மரணம் மலேசிய அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles