32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

எனது கணவரின் மரணத்திற்கு காரணமான கொடியவனை நீதியின் முன் நிறுத்துங்கள்!தேவசகாயம் மனைவி வேண்டுகோள்

எனது கணவரின் மரணத்துக்கு காரணமான நபரை கைது நீதியின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்.
எந்தவொரு தவறும் செய்யாமல் நேர்மையுடன் பணியை செய்த அவரை அடித்து கொலை செய்த நபருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமென உயிரிழந்த எஸ்.தேவசகாயத்தின் மனைவி இ.பிலோமினா ( வயது 59 ) கூறினார்.
வேலை நேரத்தின் போது நபர் ஒருவனால் தாக்கப்பட்டு,பலத்த காயத்துடன் கடந்த எட்டு மாதங்களாக வேதனையுடன் மருத்துவமனைக்கு அலைந்துக் கொண்டிருந்ததோடு
,தலைப்பகுதியில் எட்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்
படுத்தபடுக்கையாக இருந்த போது அவர் பட்ட துன்பம் இன்னும் எங்கள் குடும்பத்தின் கண்களை விட்டு இன்னும் மறையவில்லை.
எனவே இவரின் மரணத்துக்கு காரணமாக இருந்த அந்த கொடியவனை உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டுமென அவர் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles