28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இனிய நண்பர் டேவிட் பாலாவை இழந்துவிட்டேன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உருக்கம்

🔥 Views : 7
👁 Reading Now : 57

அருமை நண்பர் டேவிட் பாலா மரண செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
டேவிட் பாலா எனது நீண்ட கால நண்பர். லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் இவர் பலம் வாய்ந்தவர்.
மார்ச் மாதம் 23 ஆம் தேதி என்னை அவர் அலுவலகத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்.
நான் அவரின் உடல்நிலையை பற்றி விசாரித்தேன்.
இப்போது அவரின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத் தலைவரை இழந்திருக்கும் அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.


இதனிடையே டேவிட் பாலா நல்லுடலுக்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதி ராவ், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸா அன்வார், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர் டத்தோ எம்,ரவி, ஜசெக கண்ணன், கவுன்சிலர் சுரேஷ், கவுன்சிலர் ஏண்டி, கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம், சுங்கைவே கெஅடிலான் தொகுதி தலைவர் சாமி உட்பட பல முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles