28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பினாங்கு அய்யா ஆவன முனியாண்டி ஆறுமுகம் தனது 100 வயதில் மறைவு

🔥 Views : 6
👁 Reading Now : 64

ம. தி. க பினாங்கு கிளையின் அமைப்பாளர்களில் ஒருவரும் கழகத்தின் வளர்ச்சிக்கு தனது உழைப்பையும், பொருள் உதவியும் வழங்கி தனது பணியினை சிறப்பாக வழி நடத்திய பினாங்கு அய்யா ஆவன. முனியாண்டி ஆறுமுகம் தனது 100 வயதில் காலமானார்.
முதுமையின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியை,
அவரது மகன் மு. சந்திரசேகரன் (ம. தி. க பண்டாராயா பாரு கிளையின் செயலவை உறுப்பினர்) உறுதிப்படுத்தினார்.
தமிழ் நாட்டுத் தலைவர்கள் பினாங்கு வருகையின் போது, அவர்களை வரவேற்று உதவிய பெருந்தகை அய்யா மறைந்த ஆவன. முனியாண்டி ஆவார்.
கழகம் உண்டியல் ஏந்திய காலம் முதல் சொந்த கட்டடம் வேண்டும் என்ற சிந்தனையை திருச்சுடர் கே . ஆர். இராமசாமி பினாங்கு நிகழ்வில் அறிவிக்கும் போது, சொந்த நிதியை வழங்கி முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
ம. தி. க பினாங்கு 34ஆம் பேராளர் மாநாட்டில்
தனது 99ஆவது வயதில் நீண்ட சேவையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
இந்த சிறப்பை, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. சதீஸ். முனியாண்டி அவர்கள் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles