26.4 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் சமய ஆசிரியர்களுக்கு சிலாங்கூரில் வேலை இல்லை!

🔥 Views : 18
👁 Reading Now : 44

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மறுக்கும் சமய ஆசிரியர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் வேலை இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளிவாசல் அதிகாரிகளுக்கும் இங்கு வேலை இல்லை என்று அவர் எச்சரித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் 96 சமயப் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிவாசல்களைச் சேர்ந்த 11 அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவரும் ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களுக்கு பெரும் மிரட்டலாக இருப்பதாக சுல்தான் தெரிவித்தார்.
இதனிடையே ஆரம்பப் பள்ளியை சேர்ந்த 268 ஆசிரியர்களும் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 182 ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மறுத்துள்ள தகவலை சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles