34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விட்டால் பிரதமருடன் ஒத்துழைப்பது சந்தேகமே!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்வரவேண்டும். ஒருவேளை முன்வராவிட்டால் எதிர்க்கட்சிகள் அவருடன் ஒத்துழைப்பது சந்தேகமே என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரிஸ் ஹருண் ஆலோசனையை பிரதமரை ஏற்றுக் கொண்டால் அது அவர் செய்யும் மிகப்பெரிய தவறு. பிரதமர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆகஸ்ட் 19ஆம் தேதி மாமன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னரின் ஆலோசனை பேரில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் முன்வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles