32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மலேசியா சூப்பர் லீக் போட்டியில் பகாங் எப்.சி.யை வீழ்த்தி பினாங்கு வெற்றி

🔥 Views : 4
👁 Reading Now : 67

மலேசியா சூப்பர் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பினாங்கு எப்சி 2 – 1 என்ற கோல்கணக்கில் பகாங் எப்சியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் பகாங் டாருல் மக்முர் அரங்கில் நடைபெற்றது. ஆட்டத்தின் 60 ஆவது கென்னி அத்தியூ என்ற இளம் வீரர் பகாங் அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் பல அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டன. ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் பினாங்கு கேப்டன் என்ரிக் டோஸ் சந்தோஸ் முதல் கோலை அடித்தார். பின்னர் 71 ஆவது நிமிடத்தில் பினாங்கு அணியின் ஆட்டக்காரர் முகமட் டேனியல் இராண்டாவது கோலை அடித்து 2 -1 என் கோல் கணக்கில் பினாங்கு வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் 20 ஆட்டங்களில் 40 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் பினாங்கு உள்ளது. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பினாங்கு குழு சிட்டி அரங்கில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் திரெங்கானு எப்சியை சந்திக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles