32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜொகூர் செனாயில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்

🔥 Views : 4
👁 Reading Now : 31

வரலாறு காணாத வகையில் பெய்த அடை மழையில் ஜொகூர் செனாய் வட்டாரத்தில் உள்ள தாமான் அமான் மற்றும் கம்போங் செபாக்காட் இன்னமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இங்கு வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளில் வெல்லம் ஏறியதால் அனைத்துப் பொருட்களும் பெரும் சேதம் அடைந்துள்ளன. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் பெரும் வேதனையுடன் உள்ளனர். இந்நிலையில் செனாய் வட்டாரத்தில் துடிப்புடன் இயங்கும் செனாய் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் தினேஷ் குமார் தெரிவித்தார். நானும் இந்த வட்டாரத்தில் வசிக்கிறேன். வெள்ளம் ஏறியதால் எல்லா வீடுகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles