28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் கோல கெடா பெர்ரி முனையம் மூடப்படுகிறது

கோல கெடாவின் சில பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை விதிக்கப்பட்டுள்ளதால்,இன்று தொடங்கி 14 நாட்களுக்கு கோல கெடா பெர்ரி முனையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல கெடாவில் இரண்டு பகுதிகளில் இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளதால்,அப்பகுதிக்கு சென்று திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இன்று தொடங்கி 19ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக கடல் அமலாக்க இலாகா தெரிவித்துள்ளது. இதனால் கோல கெடாவிலிருந்து லங்காவிக்கும் லங்காவியிலிருந்து கோல கெடாவிற்குமான பயணிகள் பெர்ரி சேவை இருக்காது என அது அறிவித்தது. லங்காவிக்கு சென்று திரும்ப விரும்பம் பயணிகள்,கோல பெர்லிஸ் லங்காவி இடையிலான பெஃரி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles