29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நாடாளுமன்ற சபாநாயகர் பதவி! அஸாலினா ஓஸ்மானுக்கு ஆதரவு வழங்க ஜசெக முடிவு!

அம்னோ கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேலையில் அவருக்கு ஆதரவு வழங்க ஜசெக தயாராக இருக்கிறது. இது தொடர்பில் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மானை சந்திக்கும்படி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்கை கேட்டுக் கொண்டிருப்பதாக ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நம்பகத் தன்மைக்கு சபாநாயகர் டத்தோ அஸாஹரால் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். அணி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது தொடர்பில் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மானுடன் ஜசெக பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர். வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மானை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிய அம்னோ முடிவு செய்திருப்பதாக அம்னோ வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles