
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை ஆண்டு வந்த அம்னோவின் தலைமையிலான தேசிய முண்ணனி அரசாங்கம் நாட்டை வழி நடத்த தலைவர்களை உருவாக்காமல் பிரிவினையையும் லஞ்சத்தையும் உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி காலம் கடத்திவிட்டதாக ஜொகூர் ஜசெகவை சேர்ந்த சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளர். ஒரு திறமையான அரசாங்கம் நாட்டை வழி நடத்த ஆற்றல் மிக்க தலைவர்கள் தேவை என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப தலைவர்களை உருவாக்கி இருக்க வேண்டும்.அதனை செய்ய தவறிய தேசிய முண்ணனி அரசாங்கம் ஒரு வரலாற்று பிழையை இழைத்து விட்டது இன்று நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்க்கு காரணம் அதன் தவறான அனுகுமுறையும் கூட என கல்வியாளருமான சந்திரசேகரன் ஆறுமுகம் குறிப்பிட்டார். இந்த சுழ்நிலைக்கு தேசிய முன்னணியே பொறுப்பு ஏற்க வேண்டும் என அவர் மேலும் கூறியதோடு, பக்கத்தான் ஹரப்பான் கட்சி தலைவர்கள் இதனை ஒரு படிப்பிணையாக கொண்டு நாட்டிற்கு திறமையான தலைவர்களை உருவாக்க திட்டம் தீட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் என்பதை பணம் சம்பாதிக்கும் ஒரு களம் என்ற எண்ணத்தை அகற்றி நாட்டை அடுத்தக் கட்ட நகர்விற்கு எடுத்து செல்ல நல்ல தரமான தலைவர்களை உருவாக்க வேண்டும் என நினைவில் நிறுத்தி செயல்பட்டால் மட்டுமே நல்ல தரமான தலைவர்களை உருவாக்க முடியும் என்று முன்னாள் சொக்சோ வாரிய உறுப்பினருமான சந்திர சேகரன் தெரிவித்தார்.
