27.5 C
Kuala Lumpur
Tuesday, July 14, 2026

Vetri

பொருட்களை வாங்க, கிளினிக் செல்ல அனுமதி இல்லை! பகாங் செல்போர்ன் தோட்டப் பாட்டாளிகள் குமுறல்

🔥 Views : 18
👁 Reading Now : 38

பகாங் மாநிலத்தில் செல்போன் தோட்டத்தில் வேலை செய்யும் பாட்டாளிகள் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் கிளினிக் செல்லவும் கிராணி ஸூல் என்பவர் அனுமதி கொடுக்க மறுக்கிறார் என்று தோட்டப் பாட்டாளிகள் தெரிவித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்யும் பெண் பாட்டாளிகளின் கணவர்கள் வெளியே வேலை செய்தாலும் அவர்களும் தோட்டத்திற்கு வர அனுமதி இல்லை. மேலும் இவர்களின் பிள்ளைகள் வாங்கிக் கொடுக்கும் உணவுப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் நடமாட்ட உத்தரவு முடிந்த பின்னரும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் இவர்கள் அனைவரும் நிர்வாகியை காண சென்றுள்ளனர். ஆனால் கிராணி ஸூல் என்பவர் நிர்வாகியை சந்திக்க அனுமதி கொடுக்க மறுக்கிறார் என்று தோட்டப் பாட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles