
பேராக் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் நோய்த்தொற்று அறிகுறி தாக்கத்தினால் தன்னை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். பெருவாஸ் நாடாளுமன்ற தொகுதியில் வசதி குறைந்த மக்களுக்கு இவர் நேரடியாக உதவிப் பொருட்களை வழங்கினார். விரைவில் குணமடைந்ததும் சமூக பணிக்கு திரும்பி ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்குவேன் என்று அவர் தெரிவித்தார்.
