
நாட்டில் நேற்று வரை 1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 601 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 64 லட்சத்து 31 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 958 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
