34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

காயங்களுடன் பொறியியலாளர் இறந்து கிடந்தார்!

🔥 Views : 4
👁 Reading Now : 37

ஜொகூர் தாமான் சைந்தெக்ஸ் குடியிருப்பில் தனது வீட்டில் ரசாயன பொறியியலாளர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரின் கை மற்றும் காலில் பகுதியில் காயங்கள் இருந்ததாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது சுகாய்மி தெரிவித்தார். தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு முதல்நாள் இரவில் சென்ற அவர் அங்கு கதவு மூடப்பட்டிருந்ததால் விரக்தி அடைந்தார். இரண்டு முறை அங்குள்ள கண்ணாடி கதவை குத்தி அவர் உடைத்த காட்சிகள் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும் அவர் கையில் ரத்தம் வெளியேறுவதும் பார்க்க முடிந்ததாக அவர் சொன்னார். ஆறு மாதங்களாக திரெங்கானுவில் தமது குடும்பத்தை சென்று பார்க்க முடியாத காரணத்தினால் அவர் பெரும் விரக்தியில் இருந்து வந்தது தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles